மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

தேங்காய் உற்பத்தியில் பின்னடைவு!

தேங்காய் உற்பத்தியில் பின்னடைவு!

கஜா புயல் மற்றும் வறட்சி எதிரொலியாகத் தேங்காய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பு மற்றும் தமிழகம், கர்நாடகாவில் ஏற்பட்ட வறட்சி போன்ற காரணங்களால் 2019ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி எதிர்பார்த்தபடி இருக்காது என்று கூறப்படுகிறது. மொத்த விலை விற்பனையில் தேங்காய் விலை கிலோவுக்கு 34 ரூபாயாகக் குறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தேங்காய் விலை 38 ரூபாயாக இருந்தது. இந்த விலைச் சரிவு மார்ச் மாதம் வரையில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் இதர தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் தென்னை உற்பத்தியில் மிகப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதால் தேங்காய் உற்பத்தியில் மிகப் பெரிய இழப்பு இருக்காது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

தேங்காய் உற்பத்தியைப் பொறுத்தவரையில், 2017-18 பருவத்தில் 23.5 பில்லியன் தேங்காய்கள் உற்பத்தியாகும் என்று தேங்காய் மேம்பாட்டு வாரியம் மதிப்பிட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி 24 பில்லியனாக இருந்தது. தேங்காய் உற்பத்தி பாதிப்பு குறித்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேங்காய் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைவரான கலைச் செல்வன் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “கஜா புயலால் பட்டுக்கோட்டையில் 40,000 ஹெக்டேர் அளவிலான தேங்காய் உற்பத்திப் பரப்பு பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏக்கருக்கு 100 தேங்காய் மட்டுமே விளைகிறது. முன்பு ஏக்கருக்கு 1,600 தேங்காய் வரை இங்கு விளைந்தது” என்றார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon