மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

அர்ச்சகர் பலி: குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்!

அர்ச்சகர் பலி: குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிலைக்கு மாலை போடும்போது தவறிக் கீழே விழுந்து பலியான அர்ச்சகர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல்லில் மிகவும் பிரபலமானது ஆஞ்சநேயர் கோயில். கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று பக்தர் ஒருவர் அளித்த துளசி மாலையை 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அர்ச்சகர் வெங்கடேசன் சாத்த முயன்றார். இதற்காக, அவர் 11 அடி உயர நடைமேடை மீது ஏறினார். அப்போது நிலை தடுமாறிக் கீழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனையொன்றில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 29ஆம் தேதியன்று அவர் மரணமடைந்தார்.

இது குறித்து இன்று (பிப்ரவரி 9) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையொன்றை வெளியிட்டார். “நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி பணியில் இருந்தபோது வெங்கடேசன் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெங்கடேசன் குடும்ப நிலையினைக் கருத்தில் கொண்டு சிறப்பினமாக அவருடைய குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் திருக்கோயில் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon