மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

சீனாவுக்கு ஏற்றுமதி: சாதிக்கும் இந்தியா!

சீனாவுக்கு ஏற்றுமதி: சாதிக்கும் இந்தியா!

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட இந்த நிதியாண்டில் அதிக வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மதிப்பு 2018ஆம் ஆண்டில் வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் மொத்தம் 12.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டின் இதே காலத்தில் ஏற்றுமதி மதிப்பு 13.33 பில்லியன் டாலராக இருந்தது. கடல் உணவுகள், கரிம ரசாயனப் பொருட்கள், பிளாஸ்டிக், பெட்ரோலியப் பொருட்கள், திராட்சை, அரிசி ஆகியவை சீனாவுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போரால், சீனாவில் அமெரிக்காவுக்கான வர்த்தக வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஏற்றுமதியை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்திய அரசும் ஏற்றுமதியாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் ஏற்றுமதி தொடர்பான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் இந்தியா சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் திராட்சைத் தோட்டங்களைப் பார்வையிட சீன இறக்குமதியாளர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon