மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

குரூப் 1 தேர்வு தள்ளிவைப்பு!

குரூப் 1 தேர்வு தள்ளிவைப்பு!

வரும் மே மாதம் நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வரும் மார்ச் 3ஆம் தேதியன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பொன்றை வெளியிட்டது. அதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், முதன்மை எழுத்துத் தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது தேர்வாணையம். www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இது பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால், அதனை உணர்ந்து படிக்கும் வகையில் தேர்வர்களுக்குக் கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வரும் மே மாதம் கடைசி வாரம் நடைபெறுவதாக இருந்த இத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மை எழுத்துத் தேர்வானது ஜூலை மாதம் 2ஆவது வாரத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியிட்டுள்ளார் டிஎன்பிஎஸ்சி செயலாளர் க.நந்தகுமார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon