மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

உலகக்கோப்பை: தோனி ஏன் வேண்டும் - யுவராஜ் பதில்!

உலகக்கோப்பை: தோனி ஏன் வேண்டும் - யுவராஜ் பதில்!

எம்.எஸ்.தோனியின் பழைய அதிரடி ஆட்டத்தைப் பார்க்கமுடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் சமீபத்தில் அவரது ஆட்டம் அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்று அரை சதங்களை அடித்த அவர் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

இருப்பினும் உலகக் கோப்பை அணியில் தோனி இடம்பெறுவது குறித்து கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் தோனி அணியில் இடம்பெறவேண்டியதன் அவசியம் குறித்து பேசியுள்ளார்.

“தோனிக்கு சிறந்த கிரிக்கெட் அறிவு இருக்கிறது. விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவர். அந்தப் பணியை அவர் பல வருடங்களாகத் தொடர்ந்து சிறப்பாகச் செய்து வருகிறார். அவர் ஒரு சிறந்த கேப்டனாகவும் இருந்துள்ளார். இளம்வீரர்களை மட்டுமல்லாமல் கேப்டன் விராட்கோலியையும் அனைத்து தருணங்களிலும் வழிகாட்டி வருகிறார். இதனால் முடிவு எடுக்கும் பணிகளுக்காகவே தோனி உலகக் கோப்பை அணியில் முக்கிய இடம் பெற வேண்டும். அவர் எந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அவர் தான் பதிலளிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்குச் சிறப்பானதாக அமைந்திருக்கிறது. வழக்கமான அவரது ஷாட்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது அறிமுகமான சுப்மான் கில் குறித்துப் பேசிய யுவராஜ், “இந்தியாவுக்காக அவர் விளையாடுவதைப் பார்க்க ஆச்சர்யமாகவும் அருமையாகவும் உள்ளது. அவர் தனது ஆட்டத்தை மிகவும் மெருகேற்றியுள்ளார். இந்தியா ஏ அணியிலும் உள்ளூர் ஆட்டங்களிலும் சிறப்பாக ரன் குவித்து அவர் அணிக்குள் நுழைந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon