மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

நகைகள் ஏற்றுமதியில் பின்னடைவு!

நகைகள் ஏற்றுமதியில் பின்னடைவு!

இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதியில் 8.5 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி குறித்த விவரங்களை நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் மொத்தம் 22.41 பில்லியன் டாலர் மதிப்பிலான நகை மற்றும் ரத்தினங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட 24.5 பில்லியன் டாலர் மதிப்பிலான நகை மற்றும் ரத்தினங்களை விட 8.5 சதவிகிதம் குறைவாகும். தங்க நாணயங்கள், தங்கப் பதக்கங்கள் மற்றும் வெள்ளி நகை ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டதால்தான் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

2018 ஏப்ரல் - டிசம்பரில் வெள்ளி நகைகள் ஏற்றுமதி 81.37 சதவிகிதம் குறைந்து 579 மில்லியன் டாலராக இருந்துள்ளது. அதேபோல, தங்கப் பதக்கங்கள் ஏற்றுமதி 84.7 சதவிகிதமும், கச்சா வைரம் ஏற்றுமதி 13 சதவிகிதமும் குறைந்துள்ளது. எனினும் நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரம் ஏற்றுமதி 4 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 17.9 பில்லியன் டாலராக இருந்துள்ளது. தங்க நகைகள் ஏற்றுமதி 6.83 பில்லியன் டாலரிலிருந்து 8.77 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாக உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon