மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்

20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்

தனது 59ஆவது படத்திற்காக நடிகர் அஜித் குமார் 20 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிகர் அஜித் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன், தப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கே அஜித்தின் அடுத்த படம். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், வித்யா பாலன், அபிராமி வெங்கடாசலம், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது.

எனினும், முதற்கட்ட படப்பிடிப்பு பணிகளில் அஜித் குமார் கலந்துகொள்ளவில்லை. அஜித் இல்லாமலேயே மூன்று நடிகைகளை வைத்து படத்தின் 25 விழுக்காடு படப்பிடிப்பு பணிகளையும் ஹெச்.வினோத் முடித்துவிட்டார். தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகளில் அஜித் பங்கேற்கவிருக்கிறார். இதற்காக 20 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜித். மேலும், அவரது கதாபாத்திரத்திற்காக தாடியும் வளர்த்துள்ளார். ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் மார்ச் இறுதிக்குள் முடிந்து மே மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon