மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

ஜி.வி.பிரகாஷ் அமைத்த ஹிட் கூட்டணி!

ஜி.வி.பிரகாஷ் அமைத்த ஹிட் கூட்டணி!

காமெடியையும் காதலையும் கலந்து திரைக்கதை அமைத்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் எழில். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குநர்களின் படங்கள் முதல் முன்னணி இயக்குநர்கள் படங்கள் வரை பல முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் பத்து படங்களுக்கும் மேல் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் எழில் இயக்கத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழில் -ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ள இப்படத்திற்கான பூஜை நேற்று (பிப்ரவரி 15) நடைபெற்றது. ரமேஷ் பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஏற்கனவே இயக்குநர் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்-சித்தார்த் நடிக்கும் திரைப்படத்தை இந்நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சி.சத்யா இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

வழக்கமான எழில் திரைப்படத்தின் பாணியிலேயே உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon