மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

உச்சத்தில் தங்கம் விலை!

உச்சத்தில் தங்கம் விலை!

சர்வதேச பொருளாதார நிலை காரணமாக இந்தியாவில் நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.

சர்வதேச பொருளாதார நிலை, உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் டிசம்பர் மாதம் தொட்டே தங்கத்தின் விலை சற்று அதிகரித்து வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.23,240ஆக இருந்தது. இது ஒரே வாரத்தில் உயர்ந்து 24,000 ரூபாயைத் தாண்டியது. விலை மேலும் மேலும் அதிகரித்து ஜனவரி இறுதியில் மிகவும் உச்சத்தை எட்டி சவரன் ஒன்றுக்கு 25,000 ரூபாயைக் கடந்தது. அதிகபட்சமாக பிப்ரவரி 2ஆம் தேதி ஒரு சவரன் 25,552 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால் நகைப் பிரியர்கள், திருமணத்திற்கு நகை வாங்குவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்பிறகு மெல்ல மெல்ல விலை குறையத் தொடங்கியது. ஆனாலும் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து சராசரியாக 25,000 ரூபாய்க்கு தான் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் விலை உயர்வைக் கண்டு சவரனுக்கு 25,384 ரூபாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார பொருளாதார பின்னடைவு, வேலை நிறுத்தப் போராட்டங்கள், முதலீடுகள் சரிவு என பல காரணங்களால் விலை உயர்ந்து வருவதாக நகை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon