மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

ஊதியத்தில் தொடரும் பாலின இடைவெளி!

ஊதியத்தில் தொடரும் பாலின இடைவெளி!

வேளாண் துறையிலும் இதர துறைகளிலும் பெண்களுக்கான ஊதியம் ஆண்களை விட மிக மிகக் குறைவாகவே இருக்கும் நிலை தொடர்வதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

1948 குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் படி, அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவில் ஊதியம் வழங்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கும் நிலையில், ஊதியத்தில் பாலினப் பாகுபாடு இன்னும் தொடர்ந்துதான் வருகிறது. 2004 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில் பெண்களுக்கான தினசரி ஊதியம் அதிகரித்து வந்தாலும், ஆண் - பெண் இடையேயான ஊதிய இடைவெளி குறைந்தபாடில்லை.

2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, வேளாண் துறையில் நாள் ஒன்றுக்கு ஆண்கள் பெறும் சராசரி ஊதியம் ரூ.264.05 ஆகவும், பெண்களின் சராசரி ஊதியம் ரூ.205.32 ஆகவும் இருந்துள்ளது. அதாவது வேளாண் துறையில் ஆண்களை விடப் பெண்கள் 22.24 சதவிகிதம் குறைவான அளவிலேயே ஊதியம் பெறுகின்றனர் என்பது தெரியவருகிறது. வேளாண் அல்லாத இதர துறைகளில் ஆண்களின் தினசரி சாராசரி ஊதியம் ரூ.271.17 ஆகவும், பெண்களின் தினசரி சராசரி ஊதியம் ரூ.205.90 ஆகவும் இருந்துள்ளது. இதில் வித்தியாசம் 24.06 சதவிகிதம்.

இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஆண்களை விடப் பெண்கள் மிகக் குறைந்த அளவில் ஊதியம் பெறுவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பும் தனது ஆய்வறிக்கையில் உறுதிசெய்துள்ளது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon