மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

விளம்பரச் செலவு: தென்னிந்தியா ஆதிக்கம்!

விளம்பரச் செலவு: தென்னிந்தியா ஆதிக்கம்!

2018ஆம் ஆண்டில் இந்தியாவில் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்ட மொத்தத் தொகையில் தென்னிந்தியாவின் பங்களிப்பு ரூ.20,000 கோடியாக இருந்துள்ளது.

சவுத்சைடு ஸ்டோரி 2019 என்ற தலைப்பில் டி.எ.எம். மீடியா ரிசர்ச் நிறுவனம் தென்னிந்தியச் சந்தைகள் விளம்பரங்களுக்காகச் செலவிட்ட தொகை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், 2018ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக விளம்பரங்களுக்காக ரூ.65,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், அதில் தென்னிந்தியச் சந்தைகளின் பங்களிப்பு ரூ.20,000 கோடியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையின் அளவு 14 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் 199 டிவி சேனல்கள், 30 ரேடியோ ஸ்டேஷன்கள் விளம்பரங்களுக்கான மீடியாக்களாக செயல்பட்டு வருகின்றன. டிவி சேனல்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 137 ஆக மட்டுமே இருந்தது. டிவி, அச்சு ஊடகம் மற்றும் ரேடியோ ஆகிய ஊடகங்களில் சுமார் 66,000 விளம்பரதாரர்கள் 86,000 பிராண்டுகளின் கீழ் விளம்பரம் செய்துள்ளனர். 2018ஆம் ஆண்டில் விளம்பரத் துறையில் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ எஃப்.எம் ஆகிய ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தியதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon