மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம்!

43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம்!

தமிழகத்தில் வரும் மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமிற்காக 43,051 மையங்கள் அமைக்கப்படுமென்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று முடிந்துவிடும். இந்தாண்டு அதில் தாமதம் ஏற்பட்டது. வரும் மார்ச் 10ஆம் தேதியன்று சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்குவதற்காக பேருந்து, ரயில், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 1,652 மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பச் சுகாதார மையங்கள், அங்கன்வாடிகள், மருத்துவமனைகள், பள்ளிகளில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்படவுள்ளது. மார்ச் 10ஆம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிற சொட்டு மருந்து முகாம், இந்தாண்டு நிதித் தட்டுப்பாடு காரணமாக மார்ச் மாதம் நடைபெறுகிறது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon