மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

பாகிஸ்தானுக்கு பதிலடி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

பாகிஸ்தானுக்கு பதிலடி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் ஒட்டுமொத்த உணர்வையும் காட்டும் வகையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன், திமுக சார்பில் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

இக்கூட்டத்தில் புல்மாவாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் பற்றியும், அதை அடுத்து அரசு தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மீது மேற்கொள்ள இருக்கும் பதில் நடவடிக்கை பற்றியும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கி வருகிறார்.

இந்தியாவின் பதில் நடவடிக்கைக்கு ராகுல் காந்தி தனது பரிபூரண ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் தங்கள் உறுதியான ஆதரவை அளிக்கிறார்கள்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்ததும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இக்கூட்டம் பற்றி விளக்க இருக்கிறார்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon