மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணையும் ஹிப் ஹாப் ஆதி

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணையும் ஹிப் ஹாப் ஆதி

ஜெயம் ரவியின் 24ஆவது படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகியுள்ளார்.

அடங்க மறு படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படத்திற்கு முதலில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் 24ஆவது படமான இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதுகுறித்து ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அடுத்த படத்திற்கான இசையமைப்பாளராக எனது சகோதரர் ஹிப் ஹாப் ஆதியை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வலுவான வரவேற்பை பெற்ற ‘தனி ஒருவன்’ படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். தற்போது மீண்டும் ஜெயம் ரவியும், ஹிப் ஹாப் ஆதியும் கூட்டணி அமைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை புதுமுக இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon