மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

மீண்டும் பெயரை மாற்றிய சோனம்

மீண்டும் பெயரை மாற்றிய சோனம்

நடிகை சோனம் கபூர் சமூக வலைதளங்களில் தனது பெயரை மாற்றியுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கும், தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் சோனம் கபூர் தனது பெயரை சோனம் கே அகுஜா என மாற்றிக்கொண்டார். அதற்கு பிறகு தற்போது மீண்டும் தனது பெயரை ‘ஜொயா சிங் சொலான்கி’ என்று மாற்றியுள்ளார். இந்த மாற்றத்திற்கு காரணம் என்னவென்றால், சோனம் கபூர் தற்போது ‘தி ஜொயா ஃபேக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு துல்கர் சல்மான் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ‘தி ஜொயா ஃபேக்டர்’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்திருந்தார்.

தற்போது, இப்படத்தை புதிய யுக்தியில் விளம்பரப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படியே சோனம் கபூர் தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் பெயரை மாற்றியுள்ளார். இப்படத்தில் சோனம் கபூர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்தான் ஜொயா சிங் சொலான்கி. எழுத்தாளர் அனுஜா சவுகானின் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை இயக்குநர் அபிஷேக் சர்மா இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 5ஆம் தேதியன்று இப்படம் வெளியாகவுள்ளது. ஆதலால் படத்தின் விளம்பரப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon