மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

அலுவலக வாடகை: பெங்களூரு ஆதிக்கம்!

அலுவலக வாடகை: பெங்களூரு ஆதிக்கம்!

அலுவலகப் பரப்பு வாடகைச் சந்தையில் சர்வதேச அளவில் பெங்களூரு மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “2019ஆம் ஆண்டில் பெங்களூருவில் அலுவலக வாடகை 6.6 சதவிகிதம் வளர்ச்சி காணும். சர்வதேச அளவில் இப்பிரிவில் 10 சதவிகித வளர்ச்சியுடன் மெல்போர்ன் முதலிடத்திலும், 8.6 சதவிகித வளர்ச்சியுடன் சிட்னி இரண்டாவது இடத்திலும் இருக்கும். இந்திய நகரங்களைப் பொறுத்தவரையில் பெங்களூருவைத் தொடர்ந்து டெல்லி 6.5 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

உலகின் 33 நகரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வு விவரங்களை ஒவ்வொரு வருடமும் நைட் ஃபிராங்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆம்ஸ்டர்டாம், பெர்லின், ஹாங்காங், மாஸ்கோ, சிங்கப்பூர், டூப்ளின் உள்ளிட்ட நகரங்களும் அலுவலக வாடகையில் முன்னிலை வகிக்கும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான அலுவலகப் பரப்புகளுக்கு அதிக தேவை இருக்கிறது. சென்ற ஆண்டில் அலுவலகக் குத்தகைப் பரப்பு 46 மில்லியன் சதுர அடியைத் தாண்டியிருந்தது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon