மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

பப்ஜியின்போது சார்ஜ் காலி: கத்திக்குத்து!

பப்ஜியின்போது சார்ஜ் காலி: கத்திக்குத்து!

மும்பையில் பப்ஜி விளையாட்டின்போது சார்ஜ் தீர்ந்துபோனதால், தங்கைக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தவரைக் கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினீஷ் ராஜ்பர். நேற்று, இவர் தனது செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்ததால், செல்போனில் சார்ஜ் குறைந்து ஆஃப் ஆகிவிட்டது. விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த விளையாட்டில் சார்ஜ் தீர்ந்து போனதால், உடனே சார்ஜரை தேடி அலைந்தார் ராஜ்பர்.

வீட்டினுள் சார்ஜர் அறுந்த நிலையில் இருப்பதைக் கண்டார்.

வீடியோ கேம் பாதியிலேயே நின்றுவிட்டது. செல்போன் சார்ஜரும் உடைந்த நிலையில் உள்ளது. இதைக் கண்டு கோபமடைந்த ராஜ்பர், தனது சகோதரிதான் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று நினைத்து, அவரிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது, அவரது சகோதரி தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஓம் சந்திரகிஷோர் பவ்தாங்கர் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து ராஜ்பருக்கும் ஓமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலகலப்பில், அருகிலிருந்த கத்தியை எடுத்து ஓம் வயிற்றில் குத்தினார் ராஜ்பர். உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையொன்றில் ஓம் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் ராஜ்பர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

சமீபத்தில் மும்பையில் பப்ஜி விளையாட விலையுர்ந்த செல்போன் வாங்கித் தரவில்லை என்பதற்காக ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon