மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

வர்மா படத்தின் புதிய கதாநாயகி!

வர்மா படத்தின் புதிய கதாநாயகி!

புதிதாக உருவாக்கப்படும் வர்மா படத்தில் கதாநாயகியாக நடிகை பனிதா சந்தூ நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் இயக்குநர் பாலா ரீமேக் செய்து வந்தார். வர்மா என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்திருந்தார். படத்தின் டீசரும் கூட சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில், பாலா இயக்கிய படம் தயாரிப்பாளர்களுக்கு திருப்தியளிக்காததால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து, துருவ் விக்ரமையை ஹீரோவாக நடிக்க வைத்து, வேறு ஒரு இயக்குநரை வைத்து வர்மா படத்தை மீண்டும் தயாரிக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 எண்டர்டய்ன்மெண்ட்ஸ்’ அறிவித்தது. பாலா இயக்கிய படமும், அர்ஜுன் ரெட்டி படமும் ஒரே மாதிரி இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் அறிக்கையே வெளியிட்டது.

எனினும், கலைச் சுதந்திரத்தை காப்பதற்காகவே படத்திலிருந்து வெளியேறியதாக பாலாவும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வர்மா படத்தில், நடிகை பனிதா சந்தூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அக்டோபர் படத்தின் மூலம் நடிகை பனிதா சந்தூ பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக உருவாக்கப்படும் வர்மா படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon