மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இந்தியாவுக்கு செய்த சேவை!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: இந்தியாவுக்கு செய்த சேவை!

உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்குகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு மட்டுமே தங்களது சேவையை நிறுத்திக்கொள்ளாமல் இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார விழுமியங்களை புரிந்துகொள்ளவும், மிகச்சிறந்த சுற்றுலாவாக பயணிகளின் விடுமுறைகளை மாற்றுவதிலும் முக்கியத்துவம் கொடுப்பது இந்நிறுவனத்தின் சிறப்பம்சம்..

சில காலம் செய்தோம், பெயர் பெற்றோம் என்றில்லாமல் ஒவ்வொரு வருடமும் தங்களது சாதனைகளின் உயரத்தை அதிகப்படுத்தி அவற்றை எட்டிப்பிடிப்பது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால் தான் ஒரே வருடத்தில் மூன்று விருதுகளை Golden City Gate Awards 2018 நிகழ்ச்சியில் இவர்களால் வெல்லமுடிந்திருக்கிறது. ஜெர்மனி நாட்டின் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் டெலிவிஷன் தயாரிப்பாளர்கள் இணைந்து நடத்தும் மத்திய கூட்டமைப்பின்(FEDERAL ASSOCIATION OF GERMAN FILM AND AV PRODUCERS) சார்பில் Golden City Gate விருதுகள் வழங்கப்படுகின்றன.

உலகின் 30 நாடுகளிலிருந்து விமான நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட 157 விண்ணப்பங்களை 40 சர்வதேச நடுவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து Golden City Gate Awards 2018 நிகழ்வின் மூன்று பிரிவுகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதிகளவில் இந்தியாவுக்கு பயணிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சேவையை மையமாக வைத்து ‘‘The Largest Carrier to India’ என்ற பெயரில் அவர்கள் உருவாக்கியிருந்த வீடியோவுக்கு TV Cinema Spot category-யில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை அதிகளவில் உலக நாடுகளுடன் இணைக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திகழ்கிறது. ஒரு வாரத்திற்கு 135 விமானங்களை இந்தியாவின் 14 முக்கிய நகரங்களிலிருந்து இயக்கி உலக நாடுகளுக்கு இந்தியர்களைக் கொண்டு செல்வதையும், திரும்ப அழைத்து வருவதையும் மெச்சத்தக்க வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்துவருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு இந்திய நாட்டின் உயிர்த்துடிப்பான பகுதிகளின் உண்மைத் தன்மை, வாழ்வியல் முறை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை கச்சிதமாக Golden City Gate Awards 2018 நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ படம்பிடித்திருந்தது . ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கடந்து செல்லும் இந்தியப் பகுதிகளில் காணப்படும் இந்திய பாரம்பரியங்கள் பற்றிய தகவல்களை மிகவும் மென்மையான இசையின் வழி அந்த வீடியோவில் பரிமாறியிருக்கின்றனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வென்ற மற்ற இரு விருதுகள் என்ன? ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு விமானம் அனுப்பி செய்த சாதனை என்னவென்று தொடர்ந்து இந்தப்பகுதியில் பார்க்கலாம்.

விளம்பர பகுதி

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon