மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 பிப் 2019

சுற்றுலா துறையில் வேலை: இந்தியா முன்னிலை!

சுற்றுலா துறையில் வேலை: இந்தியா முன்னிலை!

சர்வதேச அளவில் சுற்றுலா துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நாடாக இந்தியா இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்கள் இணைந்த சுற்றுலா பகுதிகளை இணைக்கும் எகோ டூரிசம் சர்கியூட் நிகழ்ச்சி பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த மத்திய சுற்றுலா துறை இணையமைச்சர் கே.அல்போன்ஸ் பேசுகையில், “இன்றைய நிலவரப்படி, சுற்றுலா துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நாடாக இந்தியாதான் முன்னிலையில் இருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளால் பயன்பெறுவது பெரும்பாலும் ஏழை மக்கள்தான்” என்றார்.

சுற்றுலா துறையில் சுமார் 8.21 கோடிப் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் கே.அல்போன்ஸ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பத்தனம்திட்டா - காவி, வாகமன், தேக்கடி ஆகிய சுற்றுலா தலங்கள் இணைக்கப்பட்டன. பீருமேடு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளைப் பாதுகாப்பது குறித்தும் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. மேலும், சாலை மேம்பாடு, சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, பாதசாரிகளுக்கான வழித்தடங்களைப் புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்பட்டன.

செவ்வாய், 19 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon