மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 பிப் 2019

தள்ளிப்போன ஓவியாவின் 90 எம்எல்!

தள்ளிப்போன ஓவியாவின்  90 எம்எல்!

ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்எல் திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருக்கிறது.

அனிதா உதீப் இயக்கும் 90 எம்எல் திரைப்படம் முழுக்க இளைஞர்களை குறிவைத்து அடல்ட் கண்டண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஏற்கெனவே வெளியான ட்ரெய்லர் அதை உறுதி செய்தது. சமீபத்தில் இந்த பாணியில் வெளியான படங்கள் வசூலில் முன்னிலை வகித்தன. இருப்பினும் அந்தப் படங்களைக் காட்டிலும் அதிகப்படியான இரட்டை அர்த்த வசனங்கள் முத்தக்காட்சிகள் அடங்கியதாக இப்படம் உருவாகியுள்ளது. ட்ரெய்லர் பற்றி விமர்சனங்கள் எழுந்தபோது ஓவியா அதே பாணியில் ட்விட்டரில் பதிலளித்தார்.

தற்போது அவர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது என்பதை அறிவித்துள்ளார். மார்ச் 1ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளதோடு அன்றைய தினம் காலை 5 மணி காட்சியில் ரசிகர்களோடு படம் பார்பேன் என்றும் கூறியுள்ளார். தமன்னா, உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள கண்ணே கலைமானே, ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள எல்கேஜி ஆகிய படங்கள் பிப்ரவரி 22 அன்று வெளியாக உள்ள நிலையில் அதன் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘அடல்ட் ஒன்லி’ என்பதைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள 'A' என்ற எழுத்தை மட்டும் கேபிடலில் குறிப்பிட்டுள்ளார். நிவிஸ் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார். யோகி பாபு, சிம்பு, பிரபு தேவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

செவ்வாய், 19 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon