மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 மா 2019

மகிழ் திருமேனியுடன் இணையும் ஜெயம் ரவி

மகிழ் திருமேனியுடன் இணையும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை புதுமுக இயக்குநரான கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். பாக்ஸ் ஆபீசிலும் இப்படம் வெற்றி பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 24ஆவது படத்தைப் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிவருகிறார். இதைத் தொடர்ந்து ஸ்க்ரீன் சீன் நிறுவனத்துடன் மூன்று படங்களில் ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் மூன்று படங்களில் ஒரு படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அண்மையில் வெளியான தடம் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் அருண் விஜய், தன்யா ஹோப், ஸ்மிருதி, வித்யா பிரதீப், பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தடம் படத்தையும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி, மகிழ் திருமேனி கூட்டணி பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 23 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon