மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 24 மா 2019

ரிலீஸை நெருங்கும் பொன் மாணிக்கவேல்

ரிலீஸை நெருங்கும் பொன் மாணிக்கவேல்

பிரபுதேவா முதன்முறையாகக் காவல் துறை அதிகாரியாக நடிக்கும் பொன் மாணிக்கவேல் திரைப்படம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

ஏ.ஜி.முகில் செல்லப்பன் இயக்கும் இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் படக்குழு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பைத் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் சதுரங்க வேட்டை படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றிய டி.சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார்.

இந்தப் படத்தைத் தவிர பிரபுதேவா நடிப்பில் யங் மங் சங், தேவி 2, ஊமை விழிகள் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

ஞாயிறு, 24 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon