மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மா 2019

சூர்யாவின் என்ஜிகே: ரிலீஸ் அப்டேட்!

சூர்யாவின் என்ஜிகே: ரிலீஸ் அப்டேட்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா என்ஜிகே படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானபோதே படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவானது. கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் பணிகள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை. செல்வராகவனின் உடல்நிலை காரணமாகவும் படப்பிடிப்பு தள்ளிப்போனது. சூர்யா காப்பான் படத்தின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் கலந்துகொள்ள வேண்டிய சூழல் நிலவியது.

கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தில் சூர்யா பாதுகாப்புப் படை அதிகாரியாக நடிக்கிறார். என்ஜிகே படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் தாடியுடன் வலம் வருவதாக உள்ளது. தாடி வளர்வதற்காகவே படப்பிடிப்பு தள்ளிப்போனதும் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் படத்தை மே 31ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரு கதாநாயகிகள் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

செவ்வாய், 26 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon