மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

மீண்டும் அமையும் மங்காத்தா கூட்டணி!

மீண்டும் அமையும் மங்காத்தா கூட்டணி!

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் பல படங்களில் மங்காத்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. வில்லத்தனமான சாயலில் உருவாக்கப்பட்ட அஜித்தின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதன்பின் எங்கு சென்றாலும் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்வியை எதிர்கொண்டுவருகிறார். அதற்கான பதிலை தற்போது அளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி திரைப்படம் உருவாகி ரிலீஸுக்ந்த் தயாராகிவருகிறது. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்.கே.நகர் திரைப்படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். அரசியலை விமர்சித்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸும் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில் தற்போது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்துக்கான புரொமோஷன் பணிகளில் வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளார்.

அப்போது அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு, “தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அது முடிந்ததும் உறுதியாகிவிடும்” என்று கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு தற்போது சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ள மாநாடு படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளைத் தொடங்கி நடத்திவருகிறார். சிம்பு லண்டன் சென்று உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் விரைவில் படப்படிப்பு தொடங்கவுள்ளது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித், வெங்கட் பிரபு இணைந்து நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon