மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

அய்யாக்கண்ணுவின் அரிச்சந்திர மயான திட்டம்!

அய்யாக்கண்ணுவின் அரிச்சந்திர மயான திட்டம்!

பிரதமர் மோடியை எதிர்த்து காசி என்கிற வாரணாசி மக்களவைத் தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு. ஆனால், அவரை பாஜக தலைவர் அமித் ஷா அழைத்துப் பேசி, மோடியை எதிர்த்துப் போட்டியிடும் முடிவிலிருந்து விலகிகொள்ளச் செய்திருக்கிறார்.

இதனால் காசி அரிச்சந்திர மயானத்திலிருந்து பிச்சையெடுத்து மனு தாக்கல் செய்ய வைத்திருந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டதாக நம்மிடம் தெரிவித்தார் அய்யாக்கண்ணு.

இதுபற்றி அய்யாக்கண்ணுவிடமே பேசினோம். “காசியில் இருக்கும் அரிச்சந்திர மயானத்திலிருந்து 111 பேரும் புறப்பட்டுப் பிச்சையெடுத்து அந்தப் பணத்தில்தான் மோடிக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிடக் கட்டணம் செலுத்தவிருந்தோம். காசியில் இருக்கும் அரிச்சந்திரன் மயானத்துக்கு ஒரு பின்னணி உண்டு. அரிச்சந்திரன் மனைவி சந்திரமதி, இறந்துபோன தன் பிள்ளையை எரிக்கச் சுடுகாட்டுக்குப் போனார். அங்கே அரிச்சந்திரன் பிணத்தை எரிக்கப் பணம் கேட்டான். பிச்சையெடுத்துவரப் புறப்பட்டாள் சந்திரமதி. அவள் கழுத்தில் தாலி இருப்பதைப் பார்த்து அதையே கேட்டான். தாலியைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவள் தனது மனைவி என்று. அந்த மைதானத்திலிருந்து 111 வேட்பாளர்களும் புறப்பட்டுப் பிச்சையெடுத்து அந்தப் பணத்தை வைத்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு டெபாசிட் செலுத்தத் திட்டம் வைத்திருந்தோம். ஆனால், அமித் ஷா சந்திப்பால் அந்தத் திட்டத்தை ரத்து செய்தோம்” என்று கூறினார் அய்யாக்கண்ணு.

ஆவேச அய்யாக்கண்ணு, ஆஃப் ஆன பின்னணி!

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon