மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

நயன்தாரா வழியில் ஆண்ட்ரியா

நயன்தாரா வழியில் ஆண்ட்ரியா

வடசென்னை படத்தைத் தொடர்ந்து ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தில் ஆண்ட்ரியா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.

வட சென்னை திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பல கதாபாத்திரங்களில் சந்திரா பாத்திரமும் ஒன்று. ஆண்ட்ரியா ஏற்று நடித்திருந்த அப்படம் பல்வேறு உணர்வு நிலைகளைத் தாங்கி உருவாகியிருக்கும். ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது பல படங்கள் பல்வேறு கட்டங்களில் தயாரிப்பில் உள்ளன. அதில் மல்லிகை திரைப்படமும் ஒன்று. ஃபேண்டஸி, ஹாரர், ஆக்‌ஷன் என பல ஜானர்களுக்கான அம்சங்கள் திரைக்கதையில் இடம்பெற்றுள்ளன. கன்னட இயக்குநர் தில் சத்யா இப்படத்தை இயக்குகிறார். காவல் துறை அதிகாரியாகவும், இளவரசியாகவும் இரு வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஆண்ட்ரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அரண்மணை ஒன்றிற்கு காவல்துறை அதிகாரியான ஆண்ட்ரியா சென்று விசாரணை மேற்கொள்ளும்போது அவரது கடந்த காலம் ஞாபகத்துக்கு வருவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கன்னட திரையுலகிலிருந்து கார்த்திக் ஜெயராமன், கே.எஸ்.ரவிக்குமார், மனோ பாலா, ஜாங்கிரி மதுமிதா, தெலுங்கு நகைச்சுவை நடிகர் அலி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இரட்டை வேடங்களில் பெரும்பாலும் கதாநாயகர்களே நடித்துவந்த நிலையில் தற்போது கதாநாயகிகளும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். நயன்தாரா சமீபத்தில் வெளியான ஐரா படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon