மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி தரும் ரைஸ் கிச்சடி

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி தரும் ரைஸ் கிச்சடி

நாள் முழுவதும் துணை இருக்கும்

‘கிச்டி’ அல்லது ‘கிச்சிரி’ அல்லது ‘கிச்சடி’ என்பது தெற்காசிய உணவு. அதன் வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள் உணவியல் ஆராய்ச்சியாளர்கள். khicc என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைத்தது என்று பொருள். Khichdi அல்லது Khichiri என்ற சொல்லுக்கு மூலம் அதுவே.

முகலாயர்களின் அரண்மனைகளில் தினசரி உணவாக கிச்சடி கமகமத்திருக்கிறது. அரிசி, பாசிப் பருப்பு, நெய் சம அளவில் எடுக்கப்பட்டு, அவற்றுடன் சில மசாலாக்களும் சேர்த்துச் செய்யப்பட்ட கிச்சடி, பேரரசர் அக்பரின் விருப்பத்துக்குரிய உணவாக இருந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

என்ன தேவை?

அரிசி - 2 கப்

பச்சைப் பருப்பு - அரை கப்

பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்)

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 10 (நீளமாகக் கீறிக்கொள்ளவும்)

தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)

நெய் - அரை ஸ்டீபூன்

லவங்கம் - 4

பட்டை - 2

ஏலக்காய் - 4

உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, பச்சைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய்விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு, பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போடவும். சிறிது வதங்கியவுடன் பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் ஊறவைத்த அரிசி, பாசிப் பருப்பு, தேவையான அளவு உப்பு போட்டு வேக வைத்து இறக்கவும்.

என்ன பலன்?

காலை உணவு என்பது அன்றைய நாளுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உடைய உணவாக இருக்க வேண்டும். ஆனால், நேரமின்மையின் காரணமாகப் பலர் சாப்பிடாமலேயே சென்றுவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்குக் குறைவான நேரத்தில் சமைக்கப்படும் இந்த ரைஸ் கிச்சடி, முழு எனர்ஜியைத் தரக்கூடியது.

நேற்றைய ரெசிப்பி: ஓட்ஸ் கிச்சடி

திங்கள், 8 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon