மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

எதையுமே சொல்லிடாதீங்க: அப்டேட் குமாரு

எதையுமே சொல்லிடாதீங்க: அப்டேட் குமாரு

தர்பார் போஸ்டர் காலையில ரிலீஸான உடனே தலைவா.. மாஸ் அப்படின்னு டிவிட்டர், ஃபேஸ்புக்கை தெறிக்க விட்டாங்க. மதியம் அவர் ஒரு பேட்டி கொடுத்தார். அதுக்கு அப்புறம் அவரை தெறிக்க விட்டுட்டாங்க.. நான் என் நிலைப்பாடுல உறுதியா இருக்கேன்னு சொன்னாரு. என்ன நிலைப்பாடுன்னு தான் கடைசி வரைக்கும் சொல்லல. ஒரு படத்துல வடிவேலுட்ட நம்ம போண்டா மணி “அடிச்சுக்கூட கேப்பாங்க அப்பயும் சொல்லிடாதீங்க”ன்னு சொல்லிட்டு ஓடுவாருல்ல ஞாபகம் இருக்கா. அதுக்கு அவர் கூட “எதை சொல்ல வேண்டாம்னு சொல்ற.. சொல்லிட்டு போ” ன்னு சொல்வாரே.. அது மாதிரி ஆகிப்போச்சு.

இந்த கேப்புல தப்பிச்சுட்டார் மோடி. வழக்கமா அவர் வாறாருன்னா ஹேஸ்டேக்கை தூக்கிட்டு வர்ற கூட்டம் இன்னைக்கு பெருசா வரலை. என்னன்னு பார்த்தா எல்லாம் தர்பாருக்கு கமெண்ட் பண்ணிகிட்டு இருக்காங்க. அப்டேட்டை பாருங்க.. இப்ப இருக்குற நிலைமைக்கு இன்னும் நீங்க 40 படம் நடிக்கலாம்னு அவர்ட்ட சொல்லிட்டு வாரேன்.

@Thaadikkaran

உனக்கு மட்டுமா பிரச்சனை, எனக்கும்தான், ஏன் ஊருக்கே பிரச்சனை என்பதே மிகச்சிறந்த ஆறுதலாக இருக்கும்..!!

@Black_offl

எந்த உதவி இயக்குநரோட தர்பாரோ பாவம்

@Annaiinpillai

நல்ல வேலை தேர்தல் அறிக்கையில் நாங்க மழைய வர வைப்போமுனு இன்னும் யாரும் சொல்லாமல் இருப்பது மழை மக்களை பொய்க்காது என்ற நம்பிக்கையை தருகிறது!

@kathir_twits

வண்டில ஒருத்தன் ரொம்ப வேகமா போறான் அவனை

அடிக்கனும் - போலீஸ்

திருத்தனும்- நீதிபதி

எந்த கம்பெனி பைக் எவ்ளோ GST வருது - மோடி !!

@shivaas_twitz

கலைஞர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார் - எடப்பாடி

யாரு சொன்னா..?

அவங்க கட்சிக்காரங்க...

அவரு ஒரு முதல்வர்னு அப்பப்போ அவர் கிட்ட சொல்லுங்கப்பா

@pandiprakash

அலரிக் கொண்டிருக்கும் கைபேசியின் அலாரத்தை அலட்சியப் படுத்துவதிலிருந்தே தொடங்குகின்றன பல விடியல்கள்..

@parveenyunus

ஸ்ரீகாந்தின் தமிழ் கமெண்ட்ரியை கேட்கும்போதெல்லாம் திருவிளையாடல் பட நக்கீரனின் 'அவன் இவன் என்கிற ஏக வசனம் வேண்டாம்'ங்கற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது.

@ajmalnks

நதிகளை இணைத்தால் நாட்டில் பாதி வறுமை ஒழியும்.பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்-ரஜினி

ஈயம் பூசுனது மாதிரியும் பூசாதது மாதிரியும் இருக்கனும்.

@mohanramko

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும் - மோடி

இன்ஜினியர்கள் ரெடியா இருங்க

@Fazil_Amf

8 வழிச்சாலை தடை செய்யட்டதாக வரும் தீர்ப்பு நீதிபதியின் தனிப்பட்ட கருத்து - தமிழிசை

தீர்ப்புக்கும் தனிப்பட்ட கருத்துக்கும் வித்தியாசம் தெரியாத வேட்பாளரா இருக்கே

@Annaiinpillai

குழந்தைகளுக்கு பரீட்சை நடக்கும் நேரங்களில் பெற்றோர்கள் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வது குழந்தைக்கு கிரேட் எஸ்கேப் மொமென்ட் தான்!

@manipmp

நீண்டநேரம் அடித்தும் போன் எடுக்கவில்லையெனில்

"நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் உங்களை மனுசனாகூட மதிக்கவில்லைனு அர்த்தம்

@Annaiinpillai

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பது மனதை புண்ப்படுத்தாமல் இருக்க சொல்லப்படும் புது புது அர்த்தங்கள் தான்!

@idumbaikarthi

ரயில்வே ஸடேஷனுக்கு பேர் வச்சா ரயில் பெட்டி மாதிரி நீளமா வைக்கணுமா என்ன.?

'புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்'

முழுசா படிக்க மூணு நாள் ஆகும் போலயே!

@கருப்பு கருணா

கோவையில் மோடி பேச இருக்கும் கொடிசீயா மைதானத்தின் அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி,வெடிமருந்து கண்டெடுப்பு

அப்புறம்.... மீதி கதையையும் சொல்லிடுங்கப்பா....

@HAJAMYDEENNKS

எதுக்கு சுத்தி வளைத்து பேசிக்கிட்டு..தைரியமாக பிஜேபிக்கு ஆதரவுன்னு சொல்லிடுங்க ரஜினி..

கட்சி ஆரம்பிக்காமலே ரிசல்ட் பார்த்துடலாம் !

@idumbaikarthi

அருள்நிதியை வைத்து படம் இயக்குகிறார் கரு.பழனியப்பன் !

இது அரசியல் பதிவல்ல.!

@mangudiganesh

'கனிமொழியும், ராசாவும் நாட்டுக்கு சுகந்திரம் பெற்றுத் தரவா சிறை சென்றார்கள்' _அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்!

பெரியம்மா, சின்னம்மா பெண் விடுதலை பெற்றுத் தரவா சிறை சென்றார்கள் சார்வாள்?

-லாக் ஆஃப்

செவ்வாய், 9 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon