மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஏப் 2019

மோடி பயோபிக்: தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்!

மோடி பயோபிக்: தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்!

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்துக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தின் பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயாரானது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓமங் குமார் இயக்கத்தில் சந்தீப் சிங் உட்பட நான்கு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். மக்களவைத் தேர்தலை மனதில்கொண்டு தேர்தல் நேரத்தில் மோடியின் புகழைப் பாடும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை வெளியிடக்கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாகப் படக்குழு தேர்தல் ஆணையத்திடம் விளக்கமும் அளித்தது.

ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்து பின் மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கும் ஏப்ரல் 11ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் அமன் பண்வர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது டிரெய்லரில் இடம்பெற்ற இரண்டு நிமிட காட்சிகளைக் கொண்டு படம் வாக்காளர்களை குறிவைத்து உருவாகியுள்ளது என்று முடிவுக்குவர முடியாது என்று கூறி படத்துக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமீறலா என்பதைத் தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 9 ஏப் 2019