மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

வசந்த பாலனுடன் கைகோக்கும் விஷ்ணு விஷால்

வசந்த பாலனுடன் கைகோக்கும் விஷ்ணு விஷால்

வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்த பாலன் ஜெயில் திரைப்படத்தை ஜி.வி. பிரகாஷ் குமாரை கதாநாயகனாகக் கொண்டு இயக்கிவருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் அடுத்தப் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரமான படைப்புகளுக்குப் பெயர்பெற்ற வசந்தபாலன், சென்னை மாநகரில் உழைக்கும் மக்களை தாங்கள் வசிக்கும் இடங்களிலிருந்து அகற்றி நகருக்கு வெளியே குடியமர்த்தப்படுவதை மையமாகக் கொண்டு ஜெயில் படத்தை இயக்கிவருகிறார். அதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அடுத்தப் படத்திற்கான பணிகளையும் வசந்த பாலன் தொடங்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவுள்ளன.

விஷ்ணு விஷால் அண்மையில் வியாகாம் 18 நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் நடிப்பதாக ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் மற்றும் எழில் இயக்கத்தில் ஜக ஜால கில்லாடி ஆகிய திரைப்படங்களில் நடித்துவருகிறார். காடன் படப்பிடிப்பின்போது அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon