மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

96 ரீமேக்: கென்யாவில் படப்பிடிப்பு!

96 ரீமேக்: கென்யாவில் படப்பிடிப்பு!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற 96 திரைப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இதன் தெலுங்கு ரீமேக்குக்காக படக்குழு கென்யா செல்லவுள்ளது.

தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் நடிக்கிறார். தில் ராஜு இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி படத்தைத் தயாரித்து வருகிறார். மூலப் படத்தை இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக கென்யா செல்லவுள்ளது.

தமிழ்ப் பதிப்பில் தஞ்சாவூர், சென்னை ஆகிய பகுதிகளில் கதை நிகழ்வதாகக் காட்டப்பட்டிருந்த நிலையில் தெலுங்கில் விசாகப்பட்டணம், ஹைதராபாத் ஆகிய இடங்கள் கதை களங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் புகைப்படக் கலைஞராக ஷர்வானந்தின் அறிமுகத்தைக் கூறும் பாடலுக்கான படப்பிடிப்புக்காக படக்குழு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தவுள்ளது. அங்கு 15 நாள்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில் பின் விசாகப்பட்டணம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும். அதன்பின் ஹைதராபாத்தில் நடைபெறும் காட்சிகளோடு படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

96 திரைப்படத்தில் விஜய் சேதுபதி புகைப்படக் கலைஞராக வலம்வரும் காட்சிகள் ‘லைப் ஆஃப் ராம்’ பாடலில் இடம்பெற்றிருக்கும். இந்த காட்சிகள் பெரும்பாலும் வட இந்தியாவில் படமாக்கப்பட்டிருந்தன.

96 படத்தின் கன்னட ரீமேக்கில் கணேஷ், பாவனா இணைந்து நடித்துவருகின்றனர். கன்னடத்தில் இதற்கு 99 எனப் பெயரிடப்பட்டுள்ளது. ப்ரீதம் குபி இயக்குகிறார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon