மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

கோலி - ஸ்மிருதிக்குச் சர்வதேச அங்கீகாரம்!

கோலி - ஸ்மிருதிக்குச் சர்வதேச அங்கீகாரம்!

2018ஆம் ஆண்டுக்கான முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கான விஸ்டன் விருதுகள் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு விஸ்டன் விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு விராட் கோலி, ஜோஸ் பட்லர், சாம் கரண், ராரி பர்ன்ஸ், டம்மி பியாமாண்ட் ஆகிய ஐந்து வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலி இந்த விருதைத் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பெறுகிறார்.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் விராட் கோலி ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தார். 2018ஆம் ஆண்டில் மட்டும் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து அவர் 2,735 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் சராசரி 68.37. இதில் 11 சதங்கள் அடங்கும்.

முன்னணி கிரிக்கெட் வீராங்கனையாகத் தேர்வாகியுள்ள ஸ்மிருதி மந்தானா ஒருநாள், டி20 போட்டிகளில் கடந்த ஆண்டு 1,291 ரன்கள் சேர்த்துள்ளார். சிறந்த முன்னணி டி20 வீரருக்கான விருது ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon