மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஏப் 2019

அமைச்சர் வேலுமணி பற்றி பேச ஸ்டாலினுக்கு தடையில்லை!

அமைச்சர் வேலுமணி பற்றி பேச ஸ்டாலினுக்கு தடையில்லை!

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பற்றிப் பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் ஏப்ரல் 4ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை கடுமையாக விமர்சித்தார். ஊழல் செய்வதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிதான் முதலிடத்தில் இருக்கிறார் எனவும், உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்துவிட்டால் ஊழல் செய்ய முடியாது என்பதால், அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க அமைச்சர் வேலுமணி முயல்வதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தன்னை பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் தடை விதிக்க கோரியும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் வேலுமணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று (ஏப்ரல் 11) விசாரணைக்கு வந்த போது தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை தான் என்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்து, அமைச்சர் குறித்து ஸ்டாலின் பேச தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 11 ஏப் 2019