மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

புதுப்பொலிவுடன் கர்ஜிக்கும் ‘தி லயன் கிங்’!

புதுப்பொலிவுடன் கர்ஜிக்கும் ‘தி லயன் கிங்’!

1994ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் கிளாஸிக்கான வால்ட் டிஸ்னியின் தி லயன் கிங், லைவ் ஆக்‌ஷன் தொழில்நுட்பத்தில் தற்போது உருவாகி வருகிறது. நேற்று (ஏப்ரல் 10) இதன் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

ஆப்பிரிக்காவின் காட்டு ராஜா முபாசாவிற்கு, சிம்பா என்ற இளவரசன் பிறக்கிறான். சிம்பா வளர்ந்தவுடன் அடுத்த ராஜாவாகப் பதவியேற்பான் என மிருகங்கள் முன் அறிவிக்கப்படுகிறது. அதை வெறுக்கும் சிம்பாவின் மாமா சதி செய்து பதவி வெறிக்காக முபாசாவைக் கொல்கிறது. சிம்பா தன் தந்தையைத் தானே கொன்றதாக நம்பவைத்து காட்டை விட்டு விரட்டுகிறது அதன் மாமா. சிம்பா தன் காட்டை மீட்டெடுத்ததா? தந்தையைக் கொன்ற மாமாவை பழி வாங்கியதா என்பதை காட்டின் வாழ்வியலோடும், அறம் சார்ந்த மதிப்பீடுகளோடும் சொல்லும் திரைப்படமே தி லயன் கிங்.

அழகியலுக்கும் இசைக்கும் முக்கியத்துவமளித்து ஏற்கனவே வந்துள்ள கிளாஸிக்கிற்கு ஈடு செய்யும் வகையில் இந்த ரீமேக்கும் அமையும் என ட்ரெய்லரைப் பார்க்கும்போது தெரிகிறது. 3டி அனிமேஷன் மற்றும் ஐ மேக்ஸ் அனுபவத்தில் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம்.

புதிய தொழில்நுட்பத்தில் வந்துள்ள இந்தப் படத்தை அயர்ன் மேன், அயர்ன் மேன் 2, ஜங்கிள் புக் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ஜான் ஃபிப்ரோ இயக்கியுள்ளார். ஜூலை 19ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

தி லயன் கிங் ட்ரெய்லர்

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon