மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஏப் 2019

ஐபிஎல்: மும்பையின் வெற்றிக்கு வித்திட்ட 5 காரணிகள்!

ஐபிஎல்: மும்பையின் வெற்றிக்கு வித்திட்ட 5 காரணிகள்!

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லாமல் இருந்தது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுலும், கிறிஸ் கெயிலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது. கிறிஸ் கெயில் 36 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் பந்துகளுக்கு சமமாகவே ரன்களை அடித்துவந்ததால் வெற்றிக்கான ரன்ரேட் அதிகமானது. அந்நேரம் களமிறங்கிய போலார்ட் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். 31 பந்துகளில் 83 ரன்களை குவித்த அவர் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை மும்பை அணி பெற்றது.

வெற்றிக்கான 5 காரணிகள்:

5. மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார். 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் 19 ரன்களை அடித்தார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

4. பஞ்சாப் அணி ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே கொண்டு களமிறங்கியது. முகமது ஷமி ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினாலும் இறுதி நேரத்தில் பந்து வீச திறமையான பந்துவீச்சாளர்கள் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடவைப் பெற்றுத்தந்தது.

3. சாம் குரன் வீசிய 19ஆவது ஓவர் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றியது. சாம் வழக்கமான தனது லெங்க்தில் வீசாதது போலார்டுக்கு சாதகமாக அமைய அவர் அந்த ஓவரில் பந்துகளை சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் மாற்றினார். 4 ஓவர்கள் பந்துவீசி 54 ரன்களை வாரி வழங்கினார் சாம்.

2.பஞ்சாப் அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் கிறிஸ் கெயிலின் விக்கெட் வீழ்ந்ததும் தடுமாறியது. 64 பந்துகளில் ராகுல் சதம் அடித்திருந்தாலும், ஐபிஎல்லை பொறுத்தவரை இது சற்று மெதுவான ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 11 ஏப் 2019