மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

பணிக்குச் சென்ற வழக்கறிஞர் மரணம்!

பணிக்குச் சென்ற வழக்கறிஞர் மரணம்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டதால் வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக வழக்கறிஞர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது வயது 48. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வந்தார். வழக்கம் போல, இன்று (ஏப்ரல் 11) காலையில் அவர் தனது காரில் உயர் நீதிமன்றம் சென்றார். செல்லும் வழியில் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை உணர்ந்தவர், தன்னுடைய வாகன ஓட்டுநரை மாத்திரை வாங்குமாறு கூறியுள்ளார். ஓட்டுநர் வருவதற்குள், கோபாலகிருஷ்ணன் காரிலேயே மயக்கம் அடைந்தார்.

கோபாலகிருஷ்ணன் மயக்கமடைந்து கிடப்பதைப் பார்த்த அவரது ஜூனியர் ஒருவர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பணிக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதில் வழக்கறிஞர் மரணமடைந்தது, உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon