மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

தொகுதி நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்: பாரிவேந்தர்

தொகுதி நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும்: பாரிவேந்தர்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் பகுதியில் அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். தொகுதியின் வளர்ச்சிக்காகவே இந்த நிதி வழங்கப்படுகிறது. தண்ணீர் பஞ்சம் என்றாலோ, சாலைகள் சரியில்லை என்றாலோ, தொழிற்சாலைகள் இல்லையென்றாலோ அதற்கு வழிசெய்யவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

உங்கள் வரிப்பணம்தான் டெல்லியில் இருக்கிறது. உங்கள் பணம் தானாக உங்களிடம் வந்துவிடாது. நீங்கள் அனுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்தான் அழுத்தம் கொடுத்து போராடி பெற வேண்டும். அந்தத் தொகையைக் கொண்டுவந்து உங்கள் ஊர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வேன் என நான் உறுதியளிக்கிறேன். திமுக ஆண்டபோதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். உதாரணமாக, திமுக ஆண்டபோது சிலிண்டர் விலை 400 ரூபாய். இப்போது விலை 1,000 ரூபாய். இதையெல்லாம் சரிசெய்ய கழகம் உறுதியாக முடிவெடுத்துள்ளது.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு, இளைஞர்களுக்குக் கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து எனப் பல அரிய திட்டங்களை வைத்துக்கொண்டு இத்தேர்தலை எதிர்கொள்கிறோம். அதைப் பயன்படுத்தும் வகையில் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மக்கள் வசதிக்காக பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் எஸ்ஆர்எம் மருத்துவமனையின் ஐந்து கிளைகள் அமைக்கப்படும். நான் வெற்றிபெற்ற பிறகு எல்லா ஊர்களிலும் பெரியோர்களைச் சந்தித்து தேவைகளைக் கேட்டு ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பேன்” என்று கூறினார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon