மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

கேமரா ரோலிங் ஆக்‌ஷன்: அப்டேட் குமாரு

கேமரா ரோலிங் ஆக்‌ஷன்: அப்டேட் குமாரு

தேர்தல் பிரச்சாரம் தமிழ் நாட்டுல இப்போ ஃபெர்பாமன்ஸ் ரவுண்டுல இருக்கு. போன எலெக்‌ஷன்ல வயர்லஸ் மைக், பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன்லாம் போட்டு அன்பு மணி ஒரு சீன் கிரியேட் பண்ணுணாரு. இந்த தடவை கமல் கட்சி ஆரம்பிக்கும் போதே அதே மாதிரி செட் அப்போட வந்தாரு. அதுனால அன்பு மணி கொஞ்சம் ஜர்க் ஆகியிருப்பாருன்னு நினைக்குறேன். அதுலயும் அவர் நடிகர் வேறயா.. அவருக்கு ஏத்த மாதிரி நாம ஃபெர்பாமன்ஸ் கொடுக்கணும்னு பிரச்சாரத்துல எமோஷனலா ஒரு சீன் நடிச்சுருக்காரு போல. கமல் இதைப் பார்த்துட்டு நான்லாம் வாயால கேட்கலாம் மாட்டேன். கண்ணாலேயே பேசி ஓட்டு வாங்கிடுவேன்னு உலக நாயகன் பட்டத்துக்கு ஏத்த மாதிரி ஏதாவது பண்ணனும்னு இறங்கியிருக்காரு போல. இதை பார்த்துகிட்டு இருந்த நம்ம ஆளுங்க. அவர் தமிழ்ல பேசினாலும் புரியாது.. எழுதுனாலும் புரியாது.. இதுல டயலாக்கே இல்லைன்னா என்ன பண்றதுன்னு தலையை பிச்சுக்குறாங்க. இருந்தாலும் அன்பு மணி கலக்கிட்டாருன்னு சில்லறைய சிதறவிட்டுகிட்டு இருக்காங்க.. அப்டேட்டை பாருங்க. ஏதாவது சினிமா புரொடியூசர் அவர் பக்கம் போறாங்களான்னு பார்த்துட்டு வாரேன்.

@RahimGazzali

பாரபட்சமற்ற, நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு நாம் உறுதி பூணுவோம். - தேர்தல் ஆணையம்.

முதலில்... பாரபட்சமில்லாமல், நியாயமாக தேர்தலை நடத்த நீங்க உறுதி பூணுங்க.

@SathesKarki

பத்திரிக்கையாளர்: சார் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.. இரவு நேரத்தில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கிறது. என்ன செய்யலாம்.. உங்க வாய்ஸ் என்ன?

ரஜினி: சூரியனையும் நிலாவையும் இணைத்து விட்டால் வெப்பம் மிதமாக இருக்கும்.. இதை நான் பல முறை தெரிவித்து இருக்கேன்..

@parveenyunus

பணமதிப்பிழப்பின் போது பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது எங்கள் பின்னால் உள்ளனர்-மோடி #

துரத்திட்டு வர்றாங்களா..?

@sellaponu

எடப்பாடி கூட்டங்களில் பேசும் போதெல்லாம் ஒரு ஆம்புலன்ஸ் கடந்து போவதை கவனியுங்கள். அது விரைவாக கடந்து போவதை பாருங்கள்.

அடங்கொக்க மக்கா.. அதானா விஷயம் !

டேய்.. எப்பல்லாம் அந்த ஆம்புலன்ஸ் வருதோ, அங்கெல்லாம் ஆளை போடுங்க. ரெண்டு கிலோமீட்டர் தாண்டியதும் வழிமறித்து கரோர்பதி ஆயிடலாம்.

@mohanramko

தனிக்குடித்தனம் இருக்கும் கணவனுக்கு 'அரிய' வாய்ப்பு கிடைக்கிறது, காய்கறி வாங்கி வந்ததும்....

@krishnaskyblue

பாவா இவனுக கலர் கலரா நோட்டு அடிக்குறானுகன்னு பார்த்தா கள்ள நோட்டை அடிச்சு வச்சு இருக்கானுக பாவா

@kumarfaculty

`ஒரு மீனவர் உயிர் போனாலும் இலங்கை ராணுவத்தில் பல உயிர் போகும்!'- ராஜேந்திர பாலாஜி ஆவேசம்.

ஆ! வேசம்.

@Thaadikkaran

ஒருத்தர் முன்னேறுவதை பார்த்து அடுத்தவர் முன்னேறுவது வாழ்க்கையைவிட ட்ராபிக் சிக்னலில் அதிகம் காணலாம்..!

@Annaiinpillai

சாதனைகளை சொல்லி நாங்கள் வாக்கு கேட்கிறோம்; - முதல்வர் எடப்பாடி பழனிசாமி#

அப்போலோ இட்லி பெரிய சாதனை தான் சேகு?!

@Annaiinpillai

மனைவியோட சொந்தகாரங்க வீட்டுக்கு சாப்பிட வரும் பொழுது தான் மனைவிக்கு இதெல்லாம் சமைக்க தெரியுங்குர விஷயமே கணவருக்கு தெரிய வருவது டிசைன்!

@iam_Saranallu

அந்தக் காலத்தில் இருந்த "திண்ணை" வீடுகளுக்கு இந்த காலத்தில் வைக்கப்பட்ட பெயரே "வாட்ஸப் குரூப்"

@parveenyunus

நாம் தமிழருக்கு ஓட்டுபோடாதவர்கள் இனி சோறு சாப்பிடாதீர்கள் - சீமான் # சோறு இல்லாம ஆமைக்கறி மட்டுமே சாப்பிட்டா வயித்தால போவுமே..?

@ItsJokker

மோடி மீண்டும் பிரதமரானால், சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும் - இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர்

இம்ரானுக்கு மோடி மேலலாம் பாசமில்லை. இந்தியாவ எப்படியாவது அழிக்கணும், அதான் திட்டம்.

@ItsJokker

'போதி மரத்தடில இருந்ததாலதான், புத்தனுக்கு ஞானம் கிடைச்சது"னு நம்புறது மூடநம்பிக்கை.

"புத்தனுக்கு ஞானம் கிடைச்சப்ப, அவன் இருந்த இடம்தான் போதிமரம்"னு தெளிய வைக்குறது பகுத்தறிவு..!!!

@urs_venbaa

சிஸ்டம் ஆன் செய்து ஆபிசில் அமர்ந்திருப்பதே ஜென் நிலை

@itz_azha

வாழ்க்கைல ஃபர்ஸ்ட் ஆஃப் நல்லா இல்லைன்னா செகண்ட் ஆஃப் நல்லா இருக்கும்ன்னு சொல்றான்க!!!

நமக்கு எல்லா ஆஃப்லையும் ஒரே ஆப்பா தான் இருக்கு

@TalksssTweet

அன்று காடுகளில் வாழ்ந்த மனிதன் தான்......

இன்று,

ரேஷன்கார்டு, டெபிட்கார்டு, ஆதார்கார்டு, கிரேடிட்கார்டு, சிம்கார்டு, மெமோரிகார்டு, பான்கார்டு என பல்வேறு கார்டுகளில் வாழ்கிறான்......

@Buddhan*

சீமான் ஹைடெசிபல்ல மேடைல பேசறதை கரண்ட்டா மாத்துனாலே மீட்டிங்கு 100மெகாவாட் கரண்ட் எடுக்கலாம்....ஐடியா இல்லாத பசங்கடா..

@19SIVA25

என் மண்ணில் வைரம் கிடைத்தாலும் வெட்டி எடுக்க விடமாட்டேன் - டி.டி.வி. தினகரன்

ஏன்னா.!? லைசன்ஸ் எங்களுக்கு மட்டும்தான்.!? ஒருத்தனும் தொட முடியாது

@RahimGazzali

வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது - ராமதாஸ்

ஆளுங்கட்சி ஆனாலும் ஆகுமே தவிர எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வாய்ப்பே இல்லை.

டாக்டருக்கே இப்ப சிகிட்சை தேவைப்படுது போல...

@shivaas_twitz

பிஜேபி நம்பும் ராமர், பசு, பாகிஸ்தான் மாதிரி,

ஐபிஎல் நம்பும் கெயில், பொல்லார்ட், ரஸல்..!

@Anandh_Offl

நாம என்னதான் கூவுனாலும் காசு குடுக்குறவனுக்கு ஓட்டு போடுறவங்க மாறப் போறது இல்லை

-லாக் ஆஃப்

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon