மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

மதுரை அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

மதுரை அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி மதுரை அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரச்சாரங்களின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசுவதாக வேட்பாளர்கள் மீதும், நட்சத்திர பேச்சாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன், செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நேற்று (ஏப்ரல் 10) காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.. இதில் காவல்துறையினர் பலர் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர். அப்போது, அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் வாக்கு சேகரித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது இந்த செய்தி ஊடகங்களில் பரவியதை அடுத்துத் தேர்தல் அதிகாரிகள் சரவணன், உஷா ஆகியோர் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில், தேர்தல் அதிகாரி தங்கமீனா அளித்த புகாரின் பேரில், செல்லூர் காவல் நிலையம் போலீசார் ராஜ்சத்யன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த வாக்குப்பதிவு, திடீரென பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon