மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

கமல் கேட்கும் நூறு கோடி சம்பளம்!

கமல் கேட்கும் நூறு கோடி சம்பளம்!

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. இந்நிகழ்ச்சி கலவையான விமர்சனங்களைப் பெற்று இதுவரை இரு பாகங்கள் வெளியாகியுள்ளன.

முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில், 2017 ஜூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் ஒளிபரப்பாகியது. இரண்டாம் பாகம், 2018 ஜூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கியதற்காக கமல் சினிமாவில் நாயகனாக நடிக்க வாங்கிய சம்பளத்தைக் காட்டிலும் அதிகம் வாங்கியதாக கூறப்பட்டது. இவ்வாண்டு இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தயாராகவுள்ளது.

இந்நிகழ்ச்சி இம்முறை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் விஜய் தொலைக்காட்சியே பிக் பாஸ் மூன்றாம் பாகத்தை ஒளிபரப்பவிருக்கிறதாம். அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறாராம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், ஒரு நாளுக்கு ஒரு கோடி வீதம் நூறு கோடி சம்பளம் வேண்டுமென்று கமல் கேட்டுள்ளார்.

இதனால் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ச்சியடைந்தாலும். விளம்பர வருவாய் கோடிக் கணக்கில் வருவதால் தொலைக்காட்சி நிறுவனம் ஒப்புக்கொள்ளும் முடிவில் உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon