மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஏப் 2019

சூப்பர் ஹீரோவுக்கு ஜோடி யார்?

சூப்பர் ஹீரோவுக்கு ஜோடி யார்?

ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் திரைப்படம் பிரேக்கிங் நியூஸ். விஷுவல் எபெக்ட்ஸ் துறையில் பட்டம் பெற்றுள்ள ஆண்ட்ரூ தமிழில் தனது முதல் படத்தை சூப்பர் ஹீரோ கதையில் இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் இதில் ஜெய்க்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது உறுதியாகாமல் இருந்தது. தற்போது தெலுங்கு நடிகை பானு ஸ்ரீ இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். தெலுங்கில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று கவனம் பெற்றிருந்தார்.

சாதாரண மனிதன் சூப்பர் ஹீரோவாக மாறும் கதையில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். ஜெய் கதாபாத்திரத்தின் அப்பாவித் தனம் பிடித்துப்போக பானு ஸ்ரீ அவரை மணம் முடிப்பதாகவும் பின்னர் பிரிந்து வாழ்வதாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பெண்ணாகவும், பாரம்பரியத்தை கடைபிடிக்கும் பெண்ணாகவும் இரு வித தன்மை உள்ளதாக அவரது கதாபாத்திரம் உருவாகியுள்ளது.

90 நிமிடங்களுக்கும் மேல் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்படவுள்ளன. அந்தோணி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். மும்பையைச் சேர்ந்த ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்கிறார். திருக்கடல் உதயம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon