மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

யார் நண்பன், யார் பகைவன்?

யார் நண்பன், யார் பகைவன்?

ஒரு கப் காபி

நண்பன் என்ற சொல்லுக்கான வரையறை என்னவென்று உங்களிடம் கேட்டால் நீங்கள், எனது ஆழ்ந்த ரகசிய வேட்கைகளையும் பகிரக்கூடிய நபர் என்றோ, வாழ்விலும் தாழ்விலும் உடன்வருபவன் என்றோ நீங்கள் சொல்லக்கூடும். எதிரி என்ற சொல்லுக்கான வரையறை குறித்துக் கேட்டால், "எனக்குப் பகைவனாக உள்ளவன்" என்று சொல்லக்கூடும்.

நீங்கள் சொல்வது சரிதான்! நீங்கள் சொன்னவை இரண்டுமே நியாயமான, துல்லியமான வரையறைகள் தான்.

ஆனால், ஒரே ஒரு நொடி உங்களுக்கு நான் ஒரு சவால் விட விரும்புகிறேன். நமது சம்பிரதாயமான மனப்பாங்கைத் தாண்டி சுதந்திரமாக யோசிப்போம். ஐந்து வயதுக் குழந்தையிடம் நண்பன் என்றால் யார் என்று கேட்டால், "உதவுபவன்" என்றோ தனக்குப் பிடித்தவர் எவரோ அவரையோ சொல்லும். அதே குழந்தையிடம் எதிரி குறித்துக் கேட்டால், தீய செயல்கள் செய்பவன் என்று கூறும். அல்லது பிறரை வருந்த வைப்பவன் என்றும் சொல்லலாம்.

ஒரு நண்பன் என்பவன் உங்களை அழிக்கக்கூடிய அளவுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவன். ஆனால், அழிக்க மாட்டான்.

ஒரு நண்பன் என்பவன் கடவுள் அனுப்பியதுபோல எல்லா வகையிலும் உதவுபவன். எதிரி என்பவன் உங்களை உங்கள் லட்சியத்தை அடையவிடாமல் செய்பவன்.

நண்பன் அல்லது எதிரியை வெறும் மனிதராக யோசிக்கக் கூடாது. நண்பன் ஒரு நபராக இருக்கலாம். ஓர் இடமாக இருக்கலாம். உங்களை நல்வழி நோக்கித் தள்ளக்கூடியவனாக இருப்பான். எதிரி உங்களை நல்வழியிலிருந்து விலக்குபவனாக இருப்பான்.

நண்பனும் விரோதியும் குறிப்பிட்ட தனி நபர்கள் அல்ல என்பதை மறவாதீர்கள்!

- ஜானி டி. விம்ப்ரே

நன்றி: From the HOOD To doing GOOD (தீரட்டும் வேதனை மலரட்டும் சாதனை) என்னும் நூலிலிருந்து. வெளியீடு: சக்சஸ் ஞான்

சனி, 13 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon