மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

அக்யூஸ்ட் நம்பர் ஒன்: எதிர்பார்ப்பில் சந்தானம்

அக்யூஸ்ட் நம்பர் ஒன்: எதிர்பார்ப்பில் சந்தானம்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ஏ1 (எ) அக்யூஸ்ட் நம்பர் ஒன் படத்தின் டீஸர் நேற்று (ஏப்ரல் 14) வெளியானது.

தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் படம் ஏ1. நாளைய இயக்குநர் சீசன் 2வில் வெற்றிபெற்ற ஜான்சன் இந்தப் படத்தை இயக்குகிறார். தாரா அலிசா பெர்ரி கதாநாயகியாக நடிக்க, மொட்ட ராஜேந்திரன், சாய் குமார், சாமிநாதன், மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது வெளியான ஏ1 டீஸர், ரொமாண்டிக் காமெடி ஜானர் ரசிகர்களைக் கவரும் எனத் தெரிகிறது. சர்வர் சுந்தரம் திரைப்படத்தைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இரண்டாவது முறையாக சந்தானத்துடன் இணைந்து பணிபுரிகிறார். வடசென்னை பின்னணியில் கதை அமைந்திருக்கும் இந்த டீஸரில் வரும் பாடலும் கவனத்தை ஈர்ப்பதாகவுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி, கண்ணா லட்டு தின்ன ஆசையா இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ஓடி ஓடி உழைக்கணும் போன்ற படங்கள் கைவசம் உள்ளன. ஆனால், அவற்றின் பணிகள் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே முடிந்த சர்வம் சுந்தரம் படத்தின் ரிலீஸும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் நிலையில் இந்த ஏ1 டீஸர் சந்தானம் ரசிகர்களுக்கு உற்சாகமாக அமையும்.

சந்தானம் ஏ1 டீஸர்

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon