மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

சூர்யாவின் சூப்பர் அப்டேட்!

சூர்யாவின் சூப்பர் அப்டேட்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் இணைந்து நடிக்கும் காப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் அயன், மாற்றான் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யாவை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். கடைசியாக இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கவண் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

காப்பானில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாளத்தில் ‘கம்பிளீட் ஆக்டர்’ என கொண்டாடப்படும் மோகன் லால் இணைந்து நடிக்கிறார். மேலும் ஆர்யா, சாயிஷா, பூர்ணா, தமிழில் முதன் முறையாக பொமன் இரானி, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கிறது.

ஏற்கெனவே அறிவித்தபடி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு காப்பான் டீசர் வெளியானது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசரில் வரும் சண்டைக்காட்சிகள் மற்றும் அரசியல் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கின்றன.

டீசர் வெளியான சற்று நேரத்தில், ஆகஸ்டு 30 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து சரியாக மூன்று மாதத்தில் காப்பான் ரிலீஸாவது சூர்யா ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு எம்.எஸ். பிரபு மற்றும் அபிநந்தன் ராமானுஜம், எடிட்டிங் ஆண்டனி. திரைக்கதையை பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் இயக்குநர் கே.வி. ஆனந்துடன் இணைந்து எழுதியுள்ளனர்.

காப்பான் டீசர்

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon