மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

கோயல் பாய்ச்சல்: பின்னணியில் அமைச்சர்!

கோயல் பாய்ச்சல்: பின்னணியில் அமைச்சர்!

தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காட்டும் அக்கறையை, மக்களவைத் தேர்தலில் காட்டவில்லை என்ற வருத்தம் பாஜகவுக்கு இருக்கிறது.

இதுபற்றி பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலே முதல்வரிடம் தெரிவித்ததை, எடப்பாடியிடம் எகிறிய கோயல்என்ற தலைப்பில் இன்று (ஏப்ரல் 15) காலை 7 மணி பதிப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

முதல்வர் மீதான கோயலின் பாய்ச்சலுக்குக் காரணம் ஒரு அமைச்சர்தான் என்ற தகவல் இப்போது தென்மாவட்ட அதிமுக வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

“ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அமைச்சர் மணிகண்டன் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் அவர் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கினார். அவரிடம் நயினார் என்னவென்று விசாரித்தபோது, ‘முதல்வர்தான் சட்டமன்ற இடைத் தேர்தல்ல தீவிர கவனம் செலுத்தச் சொல்லியிருக்காரு. அதனாலதான் உங்களோட அதிகம் வரமுடியலை’ என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர் மணிகண்டன்.

இந்தத் தகவலை பியூஷ் கோயல் தன்னிடம் பேசும்போது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார். இந்த அடிப்படையில்தான் முதல்வரிடமே, ‘நீங்கள் 18 தொகுதிமேல் காட்டும் அக்கறையை மக்களவைத் தேர்தலில் காட்டவில்லை’ என்று கோபமாகவே கேட்டிருக்கிறார் கோயல்” என்கிறார்கள்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon