மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

மதுரை தேர்தலை ரத்து செய்ய மறுப்பு!

மதுரை தேர்தலை ரத்து செய்ய மறுப்பு!

பணப்பட்டுவாடா நடைபெறுவதால், மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக மதுரையில் சுயேச்சை வேட்பாளராக கே.கே.ரமேஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன், திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுரை தொகுதியில் போட்டியிடும், அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதுடன், பரிசுப் பொருட்களையும் வழங்குகின்றனர்… அதனால், இந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (ஏப்ரல் 15) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பணப்பட்டுவாடாவைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள் பொது நலன் என்ற பெயரில் வழக்கு தொடர்வதையே வாடிக்கையாகக் கொண்டு, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் மனுதாரருக்கு, அபராதம் விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை அடுத்து, அபராதம் விதிக்காமல், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon