மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: நெல்லி ஜூஸ்

கிச்சன் கீர்த்தனா: நெல்லி ஜூஸ்

சம்மர் ஸ்பெஷல்: குளிர்ச்சி தரும் நெல்லி

ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் வெயில் ஒரு சவால்தான். ஆனால், அதன் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்கும் உடனடி நிவாரணி தண்ணீர் மட்டுமே. அந்தத் தண்ணீருடன் கோடையில் கிடைக்கும் எளிய பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் பானங்கள் உடலில் ஏற்படும் சத்து குறைபாடுகளைப் பெருமளவில் நீக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். அதில் ஒன்று இந்த நெல்லி ஜூஸ்.

என்ன தேவை?

நெல்லிக்காய் – 5 (கொட்டை நீக்கித் துண்டுகளாக்கவும்)

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வடிகட்டவும். ஃப்ரிட்ஜில் குளிரவைத்து கண்ணாடிக் கோப்பைகளில் பரிமாறவும்.

என்ன பலன்?

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. நெல்லி ஜூஸ் உஷ்ணத்தால் ஏற்படும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும். நெல்லிக்காய், உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் தடுக்கும்.

நேற்றைய ரெசிப்பி: வேப்பம்பூ ரசம்

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது