மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

சசிதரூரை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

சசிதரூரை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்!

திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலொன்றில் நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றபோது காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சசி தரூர். நேற்று (ஏப்ரல் 15) இவர் தம்பானூர் கந்தாரி அம்மன் கோயிலுக்கு துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றார். எடைக்கு எடை வாழைப்பழம் வைப்பதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில், தராசின் ஒருமுனையில் சசி தரூர் உட்கார்ந்திருந்தார். திடீரென்று தராசு அறுந்து விழுந்ததில், அந்த கொக்கி சசிதரூரின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. அவரது காலிலும் காயம் உண்டானது. இதையடுத்து, அவர் உடனடியாக திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று (ஏப்ரல் 16) காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலொன்றை வெளியிட்டார் சசி தரூர். அதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகக் குறிப்பிட்டார். “கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், இன்று நிர்மலா சீதாராமன் என்னை வந்து சந்தித்தது நெகிழ்வாக உள்ளது. அரசியலில் இதுபோன்ற மரியாதை மிகவும் அரிதாகிப் போன நிலையில், அவரது செயல்பாடு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதேபோல, திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் சிபிஐ கட்சியைச் சேர்ந்த திவாகரனும் சசி தரூரைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon