மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

அமமுக பிரச்சாரத்தில் அரசு ஊழியர்கள்: சஸ்பெண்ட்!

அமமுக பிரச்சாரத்தில் அரசு ஊழியர்கள்: சஸ்பெண்ட்!

கிருஷ்ணகிரியில் அமமுக கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கல்வித் துறை அதிகாரி மற்றும் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் வட்டாரக் கல்வி அலுவலராக இருப்பவர் நாகராஜ். நெடுங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுபவர் ஜெயப்பிரகாஷ். அரசு ஊழியர்களான இவர்கள் இருவரும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. அரசு ஊழியர்கள் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனை இவர்கள் மீறியதாகப் புகார் எழுந்தன.

அமமுக ஆதரவுப் பிரச்சாரத்தில் ஈடுபடும் தொண்டர்கள் அணியும் தொப்பியுடன், இருவரும் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபாகருக்கு அனுப்பி வைத்தனர் சிலர். இதையடுத்து, நடந்தது என்னவென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார் பிரபாகர்.

இந்த விசாரணைக்குப் பிறகு நாகராஜ், ஜெயப்பிரகாஷ் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon